Saturday, January 16, 2010

Snake performs Obesiance to Lord Siva.True Story on 15 Dec 2010

A snake performed obeisance to to Lord Siva on 15 Jan 2010, the day of Solar eclipse.
In a town near Kumbakonam, about 300 miles from Chennai,Tamil Nadu, a snake was found with its hood spread over the image of the Linga(a sculpted figure in the sanctum sanctorum of the temple, which is consecrated and worshiped),climbed down, went to the nearby tree,plucked a leaf three times-vilva,which is used for Lord Siva-and placed it at the feet of the Lord.This has been reported in reputed Daily Dinamalar on 15 January.Tamil version is reproduced here below.

கும்பகோணம் : தேப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில், வில்வத்தை பறித்து வந்து அர்ச்சனை செய்த நல்ல பாம்பை, பக்தர்கள் திரண்டு சென்று பார்த்து அதிசயித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில், வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில், விஸ்வநாத சுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. நேற்று காலை, சூரிய கிரகணம் நடப்பதற்கு முன், 10.30 மணிக்கு, நல்லபாம்பு ஒன்று கோவிலில் விஸ்வநாத சுவாமியின் மேல் இருப்பதை, கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு, சுவாமியின் மேலிருந்து இறங்கி, நேராக தலவிருட்சம் வில்வமரத்திடம் சென்றது. மரத்தில் ஏறி, வில்வ இலையை பறித்துக் கொண்டு, மீண்டும் சுவாமி சன்னிதிக்குள் வந்தது. பின் வந்தவர்களை பார்த்து சீறியது. சுவாமியின் மேல் ஏறி, தலையில் அமர்ந்து படம் எடுத்தவாறு, சுவாமியின் மீது வில்வ இலையை போட்டது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காட்சியாக இருந்தது. இது போல் இரண்டு, மூன்று முறை செய்தது. இத்தகவல் பரவியதும், கிராம மக்கள் கோவிலுக்கு வந்து, நல்ல பாம்பை பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர்

No comments:

Post a Comment